/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராமர் பாண்டி கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு
/
ராமர் பாண்டி கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு
ADDED : பிப் 26, 2024 02:03 PM
கரூர்: அரவக்குறிச்சி அருகே, ராமர் பாண்டி கொலை வழக்கில், மேலும் பலருக்கு தொடர்பிருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை, அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 38; தேவேந்திரர் குல மக்கள் சபை கட்சி நிறுவனர். கடந்த, 19ல் கரூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு, மதுரைக்கு செல்லும் வழியில் அரவக்குறிச்சி அருகே, தேரப்பாடி பிரிவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். ராமர் பாண்டியின் உடல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கில் ஏழு நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பாக முதுகுளத்துார் நீதிமன்றத்தில் சரணடைந்த ஐந்து பேரை, கஸ்டடி எடுத்து, கடந்த, 22ம் தேதி முதல் அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மேலும் ஆறு பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

