ADDED : மார் 02, 2026 09:12 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு த.வெ.க., சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. பரமத்தி வேலுார் ரோடு விவேகானந்தா திடலில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை, த.வெ.க., கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பரமத்தி வேலுார் ரோடு துவங்கி, மேற்கு ரத வீதி, சங்ககிரி ரோடு ரவுண்டானா அருகில் திரும்பி மீண்டும் விவேகானந்தா திடல் வரை, 5 கி.மீ., துாரம் நடந்தது. இதில், ஆண்கள் பிரிவில் பத்ரி முதல் பரிசையும், ஜெயக்குமார், 2வது பரிசையும், மாதேஷ், 3வது பரிசும் பெற்றனர். பெண்கள் பிரிவில் ஷண்மதி, முதல் பரிசு, ராஷிணி, 2வது பரிசு, சுதா, 3வது பரிசு பெற்றனர். 60 வயதை கடந்தவர்கள் பங்கேற்ற, 3 பேருக்கு பதக்கம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.
