தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் 26ல் மாரத்தான் ஓட்டம்

கரூரில் 26ல் மாரத்தான் ஓட்டம்

கரூரில் 26ல் மாரத்தான் ஓட்டம்


ADDED : ஜூன் 19, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:வரும், 26ல் சர்வதேச போதை பொருள் பயன்பாடு எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டம் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியிலிருந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 26ல் சர்வதேச போதை பொருள் பயன்பாடு எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. இதில் கல்லுாரியில் தொடங்கி, திண்டுக்கல் சாலை வெங்கக்கல்பட்டி பாலம் ரவுண்டானா வரை சென்று, கரூர் கலெக்டர் அலுவலகம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானம் வரை, 5 கி.மீ., துாரம் நடக்கிறது. இதில், கலந்து கொள்வோர் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ் வழங்கப்படும். 14 வயதிற்கு மேற்பட்டோர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது dsokarur@gmail.com இ.மெயில் அல்லது 04324-299826 அல்லது 7401703493 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us