ADDED : ஜூன் 25, 2026 04:09 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டையில்,
மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில்
அம்மன் திருத்தேரில் திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு மலர் மாலைகளை கொண்டு
சிறப்பு அலங்காரம் செய்து, திருத்தேரில் வைத்து லாலாப்பேட்டை முக்கிய
வீதிகளான பழைய கரூர், திருச்சி நெடுஞ்சாலை, கருப்பத்துார் சாலை,
போலீஸ் ஸ்டேஷன் சாலை, கொடிக்கால் தெரு சாலை, வழியாக கொண்டு
செல்லப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்து மக்கள்
வழிபட்டனர்.
