/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : செப் 03, 2025 02:26 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்., மேலகம்பேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மன், விநாயகர் கோவில் புனரமைப்பு செய்து. கும்பாபிஷேகம் செய்ய கிராம முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் முடிவு செய்தனர்.
இப்பணிகள் முடிவடைந்து, நாளை 4ல் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை கிராம மக்கள், பக்தர்கள் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தீர்த்தக்குடம் நிகழ்ச்சியில் பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.