/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவ, மாணவிக்கு திருமணம்; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
/
மாணவ, மாணவிக்கு திருமணம்; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
மாணவ, மாணவிக்கு திருமணம்; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
மாணவ, மாணவிக்கு திருமணம்; பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்
ADDED : ஜூலை 02, 2024 07:24 AM
குளித்தலை : பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவிக்கு திரு-மணம் நடந்ததால், உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தொழிலா-ளியின், 17 வயது மகள், அரசு மேல்நிலைப் பள்-ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதே பள்-ளியில் மாணவர் ஒருவர் பிளஸ் 2 படித்து வரு-கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சீரு-டையில் மாணவனும், மாணவியும் பள்ளி வளா-கத்தில் திருமணம் செய்து கொண்ட படம் வைர-லானது. தகவல் அறிந்த மாணவியின் உறவி-னர்கள், திருமணம் செய்து கொண்ட மாணவன், உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிய-ளவில் மாணவியின் உறவினர்கள், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.தோகைமலை போலீசார், குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளித்தால், சட்டப்படி நடவ-டிக்கை எடுப்பர் என அறிவுறுத்தினர். இதைய-டுத்து, உறவினர்கள் குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளிக்க சென்றனர்.