தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாணவியருக்கு தற்காப்புக்கலை நிறுவனங்களுக்கு இன்று வாய்ப்பு

மாணவியருக்கு தற்காப்புக்கலை நிறுவனங்களுக்கு இன்று வாய்ப்பு

மாணவியருக்கு தற்காப்புக்கலை நிறுவனங்களுக்கு இன்று வாய்ப்பு


ADDED : ஆக 31, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:'பி.சி., - எம்.பி.சி., மாணவியருக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க, இன்றே கடைசி வாய்ப்பு' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூர் மாவட்டத்தில், பி.சி., - எம்.பி.சி., மாணவியருக்கு, ஏழு கல்லுாரி, பள்ளி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, தங்கி பயிலும் மாணவியர்களில் தற்காப்புக்கலையில் (கராத்தே மற்றும் சிலம்பம்) அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு பயிற்றுவிக்கும் நிறுவனத்தை மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அளவிலேயே தேர்வு செய்யப்படும். கராத்தே மற்றும் சிலம்பம் ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி வழங்குபவரின் நன்னடத்தை சரிபார்க்கப்படும். சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சியை பொறுத்தவரை, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள மற்றும் அத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம், இரண்டு ஆண்டுகள் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கிய அனுபவம் இருத்தல் வேண்டும். இதற்கு, கரூர் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us