/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார், நங்கவரம் டவுன் பஞ்., வார்டு சிறப்பு கூட்டம்
/
மருதுார், நங்கவரம் டவுன் பஞ்., வார்டு சிறப்பு கூட்டம்
மருதுார், நங்கவரம் டவுன் பஞ்., வார்டு சிறப்பு கூட்டம்
மருதுார், நங்கவரம் டவுன் பஞ்., வார்டு சிறப்பு கூட்டம்
ADDED : அக் 29, 2025 01:45 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அக்ரஹாரம் சிவன் கோவிலில் 1வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி தலைமையிலும், மருதுார் யூனியன் நடுநிலைப்பள்ளியில், 2வது வார்டு கவுன்சிலர் சத்யா தலைமையிலும் வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது. டவுன் பஞ்., செயல் அலுவலர் அண்ணாமலை, வி.ஏ.ஓ., குமரேசன், சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருதுார் அக்ரஹாரம் பகுதியில், தொல்லை தரும் குரங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். டவுன் பஞ்., அலுவலகத்தின் எதிரில் உள்ள பாசன கண்ணாற்றை துார்வார வேண்டும். வார்டு2ல், கழிவுநீர் வடிகால் அமைத்தல், புதிய அங்கன்வாடி மையம் கட்டுதல், தற்காலிக குழந்தைகள் பள்ளிக்கு கழிப்பறை அமைத்தல், சிமென்ட் சாலை மராமத்து பணி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதேபோல் வார்டு 3, 4, 5வது வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

