ADDED : மார் 07, 2026 03:49 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதூர் சமுதாய கூடத்தில் அவசர கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் அண்ணா மலை முன்னிலை வகித்தனர். கருர் - திருச்சி நெடுஞ்சாலையில் வீரம்பூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைத்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், தி.மு.க., கவுன்சிலர் சத்திய பிரியா, தனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சரி செய்ய கோரி பலமுறை செயல் அலுவலரிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை,' என்றார். குழாய் சரி செய்யும் பணி நடந்து வருகிறது. விரைந்து தட்டுப்பாடு இல்லாத குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைவர் சகுந்தலா தெரிவித்தார். சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
