/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் அலுவலகம் கட்ட ரூ.1.18 கோடி ஒதுக்கீடு

ADDED : நவ 01, 2025 01:22 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்த சாதாரண கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கருங்கல்பட்டி சமுதாய கழிப்பிடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல், மினி பவர் பம்ப் அமைத்தலுக்கு ரூ.3 லட்சம், மேட்டுமருதுார் ஆதிதிராவிடர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.12 லட்சம், பள்ளி மேம்பாட்டு மானியம் 2025-26ல் கூடலுாரில் யூனியன் தொடக்கப் பள்ளியில் புதிய கழிப்பிடம் அமைத்தலுக்கு, ரூ.12 லட்சம், ஆதிநத்தத்தில் யூனியன் நடுநிலைப்பள்ளியில் கழிப்பிடம் கட்ட, ரூ.24 லட்சம், மருதுார் டவுன் பஞ்., அலுவலகம் கட்ட ரூ.1.18 கோடி ஒதுக்கீடு செய்வது உள்பட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.