/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மருதுார் டவுன் பஞ்., கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : மே 02, 2025 01:05 AM
குளித்தலை
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்.,அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானு ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை இளநிலை உதவியாளர் விமல் வாசித்தார்.
இதில், 15வது ஆணைய நிபந்தனை மானியம் இரண்டாவது தவணை 2024-25ம் ஆண்டு திட்டத்தின் கீழ், பணிக்கம்பட்டி புதிய காலனியில், 4 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்தல், கோணபிள்ளையார் கோவில் முதல், குப்புரெட்டிபட்டி வரை குடிநீர் குழாய், ரூ. 8 லட்சம் மதிப்பில் அமைத்தல், பணிக்கம்பட்டி இந்திரா காலனியில் மழைநீர் வடிகால், 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் அமைத்தல்.
மருதுாரில் தடுப்பு சுவருடன் சிமென்ட் சாலை, 12 லட்சம் மதிப்பில் அமைத்தல், மூலதன மானிய நிதி 2024-25 திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்து, 53 ஆயிரம் மதிப்பில் மின்கல வாகனம் வாங்குதல் உள்பட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம், அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.