/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
மருதுார் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : டிச 31, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்.,ல், நேற்று சாதாரண கூட்டம் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் பானுஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்ற தீர்மானங்களை அலுவலக பணியாளர் முத்துக்குமார் வாசித்தார். இதில் பிறப்பு, இறப்பு பதிவு, செலவீனங்கள் மற்றும் மேட்டுமருதுார் 3 வது வார்டு மயானம் கட்டுதல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கவுன்சிலர்கள். பணியாளர்கள் கலந்து கொண்டனர்.