/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்பாட்டம்
/
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்பாட்டம்
ADDED : ஜூன் 19, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து, குளித்தலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குளித்தலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமை வகித்தார். கட்சி அலுவலகத்தை கொலை வெறியோடு தாக்கிய கும்பல் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட, ஒன்றிய, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.