/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே உருட்டு கட்டைகளுடன் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
/
கரூர் அருகே உருட்டு கட்டைகளுடன் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கரூர் அருகே உருட்டு கட்டைகளுடன் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கரூர் அருகே உருட்டு கட்டைகளுடன் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
ADDED : நவ 18, 2025 01:24 AM
கரூர்,கரூர் மாவட்டத்தில், முகமூடி அணிந்து அதிகாலை நேரத்தில் உருட்டு கட்டைகளுடன், கொள்ளையர்கள் உலா வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், அடிக்கடி சாரல் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டின் வெளிப்புறம் மற்றும் மொட்டை மாடியில், துாங்குவதை தவிர்த்து விட்டு பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஜட்டி மற்றும் முகமூடி அணிந்து கொண்டு உடலில் எண்ணெய் பூசியபடி, கொள்ளையர்கள் உருட்டு கட்டையுடன், அதிகாலை நேரங்களில் வீடுகளில் கொள்ளையடிக்க வலம் வருகின்றனர்.
கடந்த, 15ம் தேதி அதிகாலை கரூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டில், கொள்ளையர்கள் இரண்டு பேர் புகுந்து, ஒரு கிராம் தங்க மூக்குத்தியை திருடி சென்றனர். அதேபோல், நேற்று அதிகாலை அரவக்குறிச்சி அருகே கொடையூர் கூலி நாயக்கனுார் பகுதியில், மாரப்பன் என்பவரது வீட்டில் நான்கு முகமூடி கொள்ளையர்கள், உருட்டு கட்டைகளுடன் புகுந்துள்ளனர்.
பிறகு, வீட்டில் துாங்கி கொண்டிருந்த அவரது மனைவி வனிதா, 38, அணிந்திருந்த, ஐந்தரை பவுன் தாலி தங்க செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். கரூர் மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள்அச்சத்தில் உள்ளனர்.
முகமூடி கொள்ளையர்களை பிடிக்க, போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த. மாவட்ட காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

