ADDED : அக் 14, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
கரூர்:கடவூர் சமுதாய கூடத்தில் இன்று (14ல்) மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடக்கிறது.
கரூர்
மாவட்டம், கடவூர் இடையப்பட்டி மேற்கு கிராமம் கடவூர் சமுதாய கூடத்தில்
இன்று காலை, 11:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா
நடக்கிறது. அதில், பல்வேறு அரசு துறை அலுவலர்கள், பங்கேற்று அரசின்
நலத்திட்ட உதவிகள் குறித்து, மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
மேலும், விழாவில் மருத்துவ முகாம், அரசு துறை சார்பில் கண்காட்சி நடைபெற
உள்ளது. எனவே, இடையப்பட்டி மேற்கு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்,
தொடர்பு திட்ட முகாமில்
பங்கேற்று பயன் பெறலாம். இத்தகவலை, கலெக்டர்
முத்துக்குமரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
