கல் குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் கடும் எதிர்ப்பு
கல் குவாரி அமைப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 27, 2026 02:53 AM
அரவக்குறிச்சி: புகழூர் வட்டம், நஞ்சை புகழூர் அருகே அஞ்சூர் கிராமத்தில் அமையவுள்ள கல் மற்றும் கிராவல் குவாரி தொடர்பாக, தமிழ்-நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறி-யாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாமானிய மக்கள் நலக்கட்சி நிர்வாகி சண்முகம் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டு, கல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி
பேசினர்.
சண்முகம் பேசியதாவது: எந்த நிலப்பகுதியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட உள்ளது என்பது தெளிவாக குறிப்பிடப்படாத நிலையில், குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது. 300 மீட்டர் சுற்றளவுக்குள் மயானம், குடியிருப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் எதுவும் இல்லை என கிராம நிர்வாக அலுவலர் சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது. அந்த சான்று உண்மைக்கு மாறானது.
இவ்வாறு பேசினார்.
குவாரியில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால்
ஏற்படும் அதிர்வுகள் மற்றும்
அதிகப்படியான சத்தம் காரணமாக, சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும், குடியிருப்புகளும் பாதிக்கப்-படும் அபாயம் உள்ளதாக கூட்டத்தில் பொதுமக்கள்
தெரிவித்தனர்.
