ADDED : மே 02, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், திருக்கோவில் சிற்ப கலைஞர் நலச்சங்கம் சார்பில், மே தினம் கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நலிந்த சிற்ப கலைஞர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
கரூர் மாவட்ட சிற்ப கலைஞர் சங்க அலுவலக கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிகழ்ச்சியில், துணைத் தலைவர் நடராஜன், செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் அங்குராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

