தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயனுார் கட்டளை வாய்க்கால் ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு

மாயனுார் கட்டளை வாய்க்கால் ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு

மாயனுார் கட்டளை வாய்க்கால் ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு


ADDED : செப் 13, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:மாயனுார் அருகேயுள்ள, கட்டளை வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் அருகே மாயனுாரில் கதவணை உள்ளது. தற்போது கதவணைக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு, கட்டளை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அதிகரித்து வரும் காவிரி நீரால், பல இடங்களில் இருந்து வரும் ஆகாயத்தாமரை, கட்டளை வாய்க்கால் கரையிலும், ஷட்டர் அருகிலும் தேங்கியுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் போது, சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கட்டளை வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, துாய்மையான தண்ணீரை பாசனத்திற்கு செல்ல, நீர்வளத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us