/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை வரை பஸ் இயக்குவதால் அவதி
/
மாயனுார் கதவணை வரை பஸ் இயக்குவதால் அவதி
ADDED : செப் 21, 2024 02:53 AM
கிருஷ்ணராயபுரம்: காட்டுப்புத்துாரில் இருந்து மாயனுார் வரை இயக்கப்படும் டவுன் பஸ்கள், காவிரி கதவணை அருகே இறக்கி விடுவதால், அங்கி-ருந்து நீண்ட துாரம் மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே இருவழி சாலையுடன் கதவணை கட்டப்பட்டுள்-ளது.
இந்த கதவணை சாலை வழியாக கரூர் மாவட்டத்தில் இருந்து திருச்சி மாவட்டம் செல்லும் ஊர்களான காட்டுப்புத்துார்,
சீலைப்பிள்ளைபுதுார், தொட்டியம், முசிறி, திருச்சி, நாமக்கல் ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடிகிறது. தற்போது,
மாயனுார், கரூர், காட்டுப்புத்துார், வழியாக டவுன் பஸ் இயக்கப்-படுகிறது.
இரவில், காட்டுப்புத்துார், சீலைப்பிள்ளை புதுாரில் இருந்து மாயனுார் வரை வரும் டவுன் பஸ்கள், மாயனுார் கதவணை அருகே
பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால், மாயனுார் பஸ் ஸ்டாப் வரை செல்லும் பஸ் பயணிகள், நீண்ட துரம் நடந்து செல்ல
வேண்டியுள்ளது. கதவணை வரை வரும் டவுன் பஸ், மாயனுார் பஸ் ஸ்டாப் அல்லது ரயில்வே கேட் பிரிவு சாலை வரை வந்து
பயணிகளை இறக்கி விட்டால், மக்களுக்கு சிரமம் இருக்காது. எனவே, போக்குவரத்துத்துறை இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.