/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுக்க நடவடிக்கை தேவை
/
ஆற்றில் கழிவு நீர் கலப்பு தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : மே 03, 2024 07:16 AM
கரூர் : கரூர் மாவட்டம் புகழூரில் துவங்கி, குளித்தலை வழியாக திருச்சி மாவட்ட எல்லையில் காவிரி ஆறு செல்கிறது.
தற்போது காவிரியாறு வறண்டு நீர்வரத்து இல்லாத நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து சாக்கடைநீர் ஆங்காங்கே கலக்கிறது. காவிரி ஆற்றையொட்டி உள்ள பகுதிகளில் கிணற்றில் மீன் வளர்க்கின்றனர். கிணற்றில் கழிவு நீர் கலப்பதால் வளர்ப்பு மீன்கள் இறந்தும் விடும் அபாயம் உள்ளது. காவிரி பாசன பகுதியில் வாழை, வெற்றிலை, மஞ்சள், கரும்பு, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.