/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்காஞ்சி ஆற்றில் இறைச்சி கழிவு; நடவடிக்கை எடுப்பது அவசியம்
/
நங்காஞ்சி ஆற்றில் இறைச்சி கழிவு; நடவடிக்கை எடுப்பது அவசியம்
நங்காஞ்சி ஆற்றில் இறைச்சி கழிவு; நடவடிக்கை எடுப்பது அவசியம்
நங்காஞ்சி ஆற்றில் இறைச்சி கழிவு; நடவடிக்கை எடுப்பது அவசியம்
ADDED : டிச 05, 2025 10:59 AM
அரவக்குறிச்சி: இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆறு மற்றும் அண்ணாநகர் ஆற்று பாலத்தின் அருகிலோ கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி நகராட்-சியில், 100க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கடைகளில் மீதமுள்ள கழிவு-களை, நங்காஞ்சி ஆற்றின் அருகிலும், அண்ணா நகர் அருகே உள்ள பாலத்தின் அடியிலும் கொட்டி செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசு-கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபா-யமும் உள்ளது. இறைச்சி கழிவுகளால் நங்காஞ்சி ஆறு கழிவு நீரால் மிதக்கிறது.
இறைச்சி கழிவுகளை தெருக்களின் ஓரத்திலோ, கழிவுநீர் கால்வாயிலோ, நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ அல்லது பாலத்தின் அருகிலோ கொட்-டப்படுவது சட்டப்படி குற்றம். மீறி கொட்டும் கடையின் உரிமையாளர்கள் மீது, நகராட்சி நிர்-வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இறைச்சி கடை-களின் முன் நகராட்சி வாகனங்களிலேயே, இறைச்சி கழிவுகளை எடுத்து செல்ல நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

