ADDED : ஏப் 19, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்--சேலம்
பழைய சாலை வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய
ராஜவாய்க்கால் செல்கிறது.
இதில் வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து
வெளியேறும் கழிவுநீரே செல்கிறது. மேலும், இறைச்சி கழிவுகளை
ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார
கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுகளை கொட்டுவோர் மீது, மாசு
கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

