ADDED : பிப் 02, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
கரூர்: புகழூரில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
இதில், புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., மற்றும் வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சைப்புகழூர் மற்றும் திருக்காடுதுறை ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள, 50 கிராமங்கள் பயன்பெறும் வகையில், 11 மாதங்களாக மருத்துவ முகாம் நடந்து வருகிறது. இதன்படி, திருக்காடுதுறை கிராமத்தில் மருத்துவ முகாம் நடந்தது. நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
