/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த மருத்துவ குழுவினர்
/
குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த மருத்துவ குழுவினர்
குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த மருத்துவ குழுவினர்
குளித்தலை மனநல காப்பகத்தை ஆய்வு செய்த மருத்துவ குழுவினர்
ADDED : மே 02, 2025 02:10 AM
குளித்தலை:
குளித்தலை அடுத்த, புழுதேரியில் இயங்கி வரும் சாந்திவனம் மனநல காப்பகத்தை, கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட மனநல மருத்துவர் பாரதி கார்த்திகா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த மனநல காப்பகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரிக்கப்படுகின்றனர். மேலும் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கி, அவர்களின் முகவரியை கண்டறிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.
இங்கு மனநலம் பாதிக்கப்பட்டு குணமாகி வருபவர்களுக்கு பாக்கு மட்டை தட்டு தயாரித்தல், துணிகளில் ஓவியம் வரைதல், தையல் பயிற்சி, கால்மிதி தயாரித்தல், அலங்கார அணிகலன்கள் செய்தல், கால்நடை பராமரிப்பு, விவசாய பயிற்சி, புத்தகங்கள் வாசித்தல், யோகா தியானம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், மாவட்ட மனநல மருத்துவர் பாரதி கார்த்திகா ஆகியோர் ஆய்வின் போது, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினரக காப்பகத்தின் இயக்குனர் அரசப்பன். ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் உடனிருந்தனர்.