/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவேந்தல்
/
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவேந்தல்
ADDED : ஜன 03, 2026 07:57 AM

குளித்தலை: குளித்தலை அடுத்த இடையப்பட்டி பஞ்., சுருமான்பட்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், 12ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் பல்சுவை நிகழ்ச்சி நடந்தது.
வானகத்தின் அறங்காவலர் குழு தலைவர் மகேஸ்மெல்வின் தலைமை வகித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மகள் மீனா பாலசஞ்சீவி, வானகத்தில் உள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கல்லறையில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
வானகத்தின் அறங்காவலர்கள் டேவிட் அமலநாதன், வெற்றிமாறன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருதம்குமார் வரவேற்றார். மூத்த முன்னோடி இயற்கை விவசாயி அரியலுார் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அரச்சலுார் செல்வம் ஆகியோர், இயற்கை வேளாண் விஞ்ஞானியின் சாதனைகளை பற்றி கூறினர்.
முன்னதாக, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சமாதியில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் மலர்கள் துாவி வழிபட்டனர். பின்னர் இயற்கை பண்ணைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து சிலம்பாட்டம், வாள் ஆட்டம், தட்டு ஆட்டம் போன்ற தற்காப்பு மரபு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களுடன், வானகத்தின் ஆலோசனைகளை பெற்று, இயற்கை விவசாயம் செய்த விவசாயிகள் தங்களது அனுபவங்களை எடுத்து கூறினர். மேலும் பல்வேறு விதைகள், பண்ணை விளைபொருட்கள், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் புத்தகங்கள், இயற்கை உணவு பொருட்கள் கொண்ட கண்காட்சி நடந்தது. இதில் மரபு சிறு தானியங்கள், நெல் ரகங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள், பயறு வகைகள் ஆகியவற்றை விவசாயிகள் வாங்கி பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வானகத்தின் செயலாளர் பிரேமாவதி, மூத்த முன்னோடி இயற்கை விவசாயிகள் கணேசன், கோச் தங்கராஜ், பெரியசாமி, பொன்னுராம், பெருமாள், சிவசுப்பிர
மணியன், மாணவ மாணவியர் உள்பட இயற்கை விவசாயி கள், இயற்கை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

