தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துப்பாக்கியுடன் கூலிப்படையினர் கைது

துப்பாக்கியுடன் கூலிப்படையினர் கைது

துப்பாக்கியுடன் கூலிப்படையினர் கைது


ADDED : அக் 11, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர், ராயனுார் பழனிவேல் நகரைச் சேர்ந்தவர், ராமசுப்பிரமணி. இவர், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து, திருமாநிலையூரைச் சேர்ந்த ஷோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஷோபனா வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழி ரம்யா என்பவருக்கும், தொழிற்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, விஜயின் குடும்பத்தினருக்கும், ஷோபனாவிற்கும் கடந்த மாதம், 10-ம் தேதி பிரச்னை ஏற்பட்டு, போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமசுப்பிரமணி தன் வீட்டில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக, தான்தோன்றிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனையில், ஆயுதங்கள் இருப்பது தெரிந்தது. ராமசுப்பிரமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவருடன் தொடர்பில் இருந்த கூலிப்படை குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, கூலிப்படையினர் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us