தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு


ADDED : செப் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில், மாயனுார் கதவணை

க்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. ஆண்டுதோறும் அணையின் நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருக்கும் போது, பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, தாளடி, சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டு ஜூன் 12ல், அணை நீர்மட்டம், 79.56 அடியாக இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. கடந்த ஆக., 1ல், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை, முதல்வர் விஜய், கடந்த, 1ல் திறந்து வைத்தார். நேற்று முன்தினம் காவிரி ஆற்று தண்ணீர் கரூர் வந்தடைந்தது. நேற்று மாலை, 4:00 நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு, 4,081 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. இதில் காவிரி ஆற்றில், 2,084 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கதவணையில், 514 மில்லியன் கன அடி தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us