/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேட்டுமருதுார் பாசனம் கண்ணாறு துார் வார விவசாயிகள் கோரிக்கை
/
மேட்டுமருதுார் பாசனம் கண்ணாறு துார் வார விவசாயிகள் கோரிக்கை
மேட்டுமருதுார் பாசனம் கண்ணாறு துார் வார விவசாயிகள் கோரிக்கை
மேட்டுமருதுார் பாசனம் கண்ணாறு துார் வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 06, 2024 02:59 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து, மருதுார் டவுன் பஞ்., கூடலுார் வழியாக, மேட்டு மருதுார் மேல வயல் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசன கண்ணாறு வருகிறது.
இதில் செடி கொடிகள் வளர்ந்து, பாசன கண்ணாறு துார்ந்து போய் உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் நடவு உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சவும், மழை காலங்களில் அதிகளவு வரும் மழை தண்ணீர் விவசாய நிலத்தில் தேங்கி, நெல் பயிர்களை சேதம் செய்யாமல் பாதுகாக்கும் வகையில் மழை தண்ணீரை உடனே வெளியேற்றிடும் வகையில், வடிகால் கண்ணாறு துார் வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கலெக்டர் மற்றும் பொது பணித்துறை உதவி செயற்பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.