ADDED : ஆக 10, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே, மில் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
மாவட்டம், ஸ்ரீரங்கம் திருபாத்துறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்,
43; இவர், கரூர் வடுகப்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி, மாவு
அரைக்கும் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த, 3 இரவு திருச்சியில்
இருந்து கரூர் வந்த முருகேசனை, அவரது குடும்பத்தினரால் தொடர்பு
கொள்ள முடியவில்லை. மொபைல் போனையும், முருகேசன் எடுக்கவில்லை.
இதையடுத்து,
முருகேசன் குடும்பத்தினர் கரூர் வடுகப்பாளையத்துக்கு, கடந்த, 8ல்
சென்று பார்த்த போது, வீட்டில் முருகேசன் மர்மமான முறையில் இறந்து
கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, முருகேசனின் மனைவி பேபி, 40,
அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
