/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார் மீது மினி பஸ் மோதல் மனோகரா கார்னரில் நெரிசல்
/
கார் மீது மினி பஸ் மோதல் மனோகரா கார்னரில் நெரிசல்
ADDED : அக் 05, 2024 01:03 AM
கார் மீது மினி பஸ் மோதல்
மனோகரா கார்னரில் நெரிசல்
கரூர், அக். 5-
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, கார் மீது மினி பஸ் மோதியதில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரூர் அருகே, புலியூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 40; இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு மாருதி சுசூகி காரில், குடும்பத்துடன், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை சரவணன் ஓட்டினார். அப்போது, தான்தோன்றிமலை பகுதியில் இருந்து வந்த மினி பஸ், காரின் பக்கவாட்டில் மோதியது. அதில், காரின் பின்னாள் சேதம் அடைந்தது. இதனால், மினி பஸ் டிரைவர் மற்றும் சரவணன் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மனோகரா கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, மனோகரா கார்னர் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த, போக்குவரத்து போலீசார் மினி பஸ் மற்றும் காரை, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதனால், கரூர் மனோகரா கார்னர் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.