தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 100 சதவீத ஓட்டளிப்பைவலியுறுத்தி மினி மாரத்தான்

100 சதவீத ஓட்டளிப்பைவலியுறுத்தி மினி மாரத்தான்

100 சதவீத ஓட்டளிப்பைவலியுறுத்தி மினி மாரத்தான்


ADDED : மார் 29, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் ;கரூர் காந்தி கிராமத்திருந்து, 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி, நேற்று மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார், கரூர் எஸ்.பி.,ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நான்கு தொகுதிகளிலும், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளர்களிடையே ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும், தேர் தல் ஆணையம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், பெண்களுக்கு கரூர் சுங்ககேட் பகுதியில் தொடங்கி, மாவட்ட விளையாட்டு மைதானம் வரையும், ஆண்களுக்கு கரூர் காந்திகிராமம் மாநகராட்சி பூங்காவில் தொடங்கி, மாவட்ட விளையாட்டு மைதானம் வரை, மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், 400க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தனசேகரன், மாநகராட்சி கமிஷனர் சுதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் தேன்மொழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் உள்பட பலர் பங்கேறனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us