/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
/
மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்
ADDED : பிப் 03, 2025 08:41 AM
கரூர்: ''மாவட்டத்திற்கு பல்வேறு  திட்டங்கள் செயல்-படுத்தப்பட்டு வருகிறது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்-ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.  கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  நினைவுத்துாணை அடிக்கல் நாட்டி பின் பேசியதாவது:
கடந்த 100 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியில், தலைவர்கள், அரசு அதி-காரி, நீதிபதி, வக்கீல், தொழில் முனைவோர், டாக்டர், பொறியாளர் என ஒவ்வொரு துறைக-ளிலும் நுாற்றுக்கணக்கானோரை உருவாக்கி உள்ளது. நானும் குழந்தை பருவத்திலே காலடி வைத்து கல்வியை பயின்றோம் என்று நினைக்-கின்ற போது பெருமையாக உள்ளது.கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பள்ளி கல்வித்து-றைக்கு, 44 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்-டுள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புது-மைப்பெண், காலை உணவு உள்பட பல்வேறு திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. விளை-யாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தை கொடுக்க கூடிய அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.இந்த மாவட்டத்தில் வேளாண் கல்லுாரி தொடங்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறது. கரூர் காமராஜ் வணிக வளாகத்தில் புதிய கட்-டிடம், கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதா-னத்தில் நுாலகம்,  ஐ.டி., பார்க்,  200 ஏக்கர் பரப்ப-ளவில் புதிய சிப்காட் உள்பட  பல்வேறு திட்-டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களோடு சேர்த்து இன்னும் நிறைய வளர்ச்சி பணிகளை கொண்டு சேர்த்திட அரசும், மக்களும் கரம் கோர்த்து எடுத்து செல்வோம்.எனக்கு குடும்பம் எல்லாமே நம்முடைய கரூர் மக்கள் தான். கரூர் தொகுதி மக்கள் தான்,  ஐந்து முறை வெற்றி பெற வைத்தனர் என்ற அர்ப்ப-ணிப்பு உணர்வோடு செயல்பட்டு கொண்டு இருக்-கிறேன். நுாற்றாண்டு நினைவு கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு, அவர், பேசினார்.கரூர் மேயர் கவிதா, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாசுந்தரி, கமிஷனர் சுதா, மண்டல தலைவர் அன்பரசு, பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி உள்பட பலர் பங்-கேற்றனர்.

