/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்
/
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி சாடல்
ADDED : மார் 24, 2025 06:50 AM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் நகர தி.மு.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.
அப்போது, அவர் பேசுகையில், ''பள்ளப்பட்டி மக்கள் அன்போடு பிரியாணி கொடுத்தால் அது திருமண விழா; நோன்பு கஞ்சி மற்றும் வடை கொடுத்தால் அது ரமலான் திருநாள்; ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து, குருபானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்; அதுவே ஒரே ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால், அது தேர்தல் காலம்.
எனவே, ஒரு ஆடு அல்ல எத்தனை ஆடு வந்தாலும், பள்ளப்பட்டியில் உள்ளேயும் வர முடியாது, உள்ளே வந்துவிட்டு வெளியேயும் செல்ல முடியாது என, கடந்த தேர்தலில் காட்டி உள்ளீர்கள்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சாடி பேசினார்.