/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1.36 கோடியில் அசலதீபேஸ்வரர் கோவில் திருப்பணி ஆய்வுக்கு பின் பணி துவங்க அமைச்சர் சேகர்பாபு அனுமதி

ADDED : பிப் 03, 2025 08:36 AM
மோகனுார்: அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 1.36 கோடி ரூபாய் மதிப்பில், கும்பாபி-ஷேக திருப்பணியை துவங்க அனுமதி அளித்தார்.
மோகனுாரில் பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்-வரர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி மதுகர-வேணி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஏற்றப்பட்டுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அணையாத தீபமாக சுடர்விட்டு எரிவதால், சுவாமிக்கு அசலதீபேஸ்-வரர் என்ற பெயர் உள்ளது. இக்கோவில் வைப்-புத்தலமாக விளங்குகிறது.இக்கோவில், 2008ல் கும்பாபிஷேகம் செய்யப்-பட்டது. அதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை, 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், உபயதாரர்கள் பங்களிப்-பாக, 47.50 லட்சம் ரூபாய் என, மொத்தம், ஒரு கோடியே, 36 லட்சத்து, 50,000 ரூபாய் செலவில், கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக ஹிந்து சமய அறநிலை-யத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று, அசலதீ-பேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்-கொண்டார். சுவாமியை வழிபட்ட அவர், கோவிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார். அப்-போது, 'கோவில் கும்பாபிஷேக திருப்பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும் என கேட்-டுக்கொண்டார்.
தொடர்ந்து, கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமியை வழி-பட்டார். கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மோகனுார் கிழக்கு ஒன்-றிய தி.மு.க., செயலாளர் நவலடி, மோகனுார் டவுன் பஞ்., செயலாளர் செல்லவேல், டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவ-ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.