/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தப்பாட்ட கலைக்குழுவுக்கு அமைச்சர் விருது வழங்கல்
/
தப்பாட்ட கலைக்குழுவுக்கு அமைச்சர் விருது வழங்கல்
ADDED : பிப் 13, 2025 03:06 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்., பேரூர் கலைநயா கிராமிய தப்பாட்ட கலைக்குழுவிற்கு, ராஜகலைஞன் என்ற விருதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
இந்த குழுவில், சோலைராஜா தலைமையில், 15 கலைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கலைஞர்கள் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி உள்பட தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்பட்டு வரும் இல்லம்தேடி கல்வி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு, எச்.ஐ.வி. எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்-றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரில் நடைபெற்ற தப்பாட்ட கலைநிகழ்ச்சியில், இக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் தப்பாட்டம், மாடு மயிலாட்டம், பெண்கள் தப்பாட்டம், தாரை தப்பட்டை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து காட்-டினர். இதை பாராட்டி, தமிழகத்தில் சிறந்த கிராமிய தப்பாட்ட கலைக்குழு என்று, பேரூர் கலைநயா கிராமிய தப்பாட்ட கலைக்-குழுவினரை, தமிழ் பண்பாட்டு கழகம் சார்பாக தேர்வு செய்யப்-பட்டுள்ளனர். பின்னர் குழுவினரை பாராட்டி, ராஜகலைஞன் என்ற விருதை, பேரூர் கலைநயா கிராமிய தப்பாட்ட கலைக்குழு தலைவர் சோலைராஜவிடம் தங்கப்பதக்கம், நற்சான்றிதழை அமைச்சர் மகேஷ் வழங்கி பாராட்டினார்.

