/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுபான்மையினர் கல்வி கடன் விண்ணப்பிக்க அழைப்பு
/
சிறுபான்மையினர் கல்வி கடன் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
கரூர்: கூட்டுறவு வங்கிகள் மூலம், சிறுபான்மையின மாணவ, மாணவி-கள் கல்வி கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்-டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டு முதல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன்கள், 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.கரூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதில், மதத்திற்கான சான்று, பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்-றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான், மதிப்பெண் சான்றிதழ் ஆதார் அட்டை, வருமான சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.