sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்'

/

'சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்'

'சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்'

'சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்'


ADDED : மே 18, 2025 06:32 AM

Google News

ADDED : மே 18, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சிறுபான்மையினர், பொருளாதார மேம்பாட்டு கடனுக்கு விண்-ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம், சுயவேலைவாய்ப்பு குறைந்த வட்டி விகிதத்தில் செயல்ப-டுத்தப்படுகிறது. திட்டம்-1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக, 20 லட்சம், திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு, 8 சதவீதம், பெண்களுக்கு, 6 சத-வீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக, 30 லட்சம் ரூபாய்- வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு, 5 சதவீதம், பெண்க-ளுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக, 10 லட்சம்- வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவ-ருக்கு, 1 லட்சம்- ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு, 20 லட்சம் ரூபாய்- வரை, 3 சதவீதம் வட்டி விகிதத்தில் கல்வி கடனு-தவி வழங்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் ஆகியோர் விண்-ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்-கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவ-லகங்களில் விண்ணப்பம் பெற்று, வங்கி கோரும் உரிய ஆவணங்-களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவலை, கலெக்டர் தங்க

வேல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us