தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரூ.20.57 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு

ரூ.20.57 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு

ரூ.20.57 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைப்பு


ADDED : மார் 12, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 20.57 கோடி ரூபாய் மதிப்பிலான, 47 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்-தில்பாலாஜி தொடங்கி

வைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை, முடிவுற்ற திட்டப் பணிகளை, கரூர்

எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.

இதில், காதப்பாறை பஞ்சாயத்தில், பெரிச்சிபாளையம் முதல் மாங்காசோளிபாளையம் வரை, 33.82 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி, வெண்ணைமலைபட்டியில், 28.14 லட்சம் ரூபாயில் சாலை மேம்பாட்டு பணி, ஒய்ட்பீல்டில், 18.08 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி.

பேங்க் காலனியில், 39.06 லட்சம் ரூபாயில் கூடுதல் சாலை மேம்பாட்டு பணி, சண்முகா நகரில், 8.29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, காமராஜர் நகரில் ரூ.7.75 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி, பூர்ணிமா கார்டனில், 28.50 லட்சம் ரூபாயில் சாலை மேம்பாட்டு பணி, லட்சுமி நகர், பரணி நகர், ஆசை நகரில், 44.86 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 சாலைகள் மேம்பாட்டு பணி, அம்மன் நகர் மற்றும் தரணி நகரில், 43.23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 சாலை மேம்-பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பசுமை நகரில், 50.50 லட்சம் ரூபாயில் சாலை மேம்பாட்டு பணி, சோளியம்மன் நகரில், 27.05 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி, பி.ஜி. நகரில், 90.38 லட்சம் மதிப்பில், 4 சாலை மேம்பாட்டு பணி, நெரூர் வடக்கு ஊராட்சி பசுமை நகரில், 8.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, முனியப்பனுாரில், 18.35 லட்சம் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகளையும் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

நெரூர் தெற்கு ஊராட்சி அம்பேத்கர் நகரில், 9.06 லட்சம் ரூபாய், சோமூர் பஞ்., அச்சமாபுரத்தில், 15.05 லட்சம் ரூபாய், கல்லுப்பாளையம் குடித்தெருவில், 7.30 லட்சம் ரூபாய், திருமுக்-கூடலுாரில், 5.13 லட்சம் ரூபாய், மின்னாம்பள்ளி பஞ்., நெரூர் முதல் சோமூர் வரை, 26.73 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி மற்றும் ரூ.28.75 லட்சம் மதிப்பில் நவஜீவன் பள்ளி சாலை மேம்படுத்தும் பணி, சங்கிலிபுரம் ஸ்ரீ மாரியம்மன் நகரில், 32.04

லட்சம் மதிப்பீட்டில், 2 சாலை மேம்பாட்டு பணி, வசந்தம் நகரில், 53.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி, அரசு குடியிருப்பு பிரிவில், 10 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தும் மொத்தம், 20.57 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 47 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை, கரூர் எம்.எல்.ஏ.,செந்தில்பா-லாஜி தொடங்கி

வைத்தார்.

நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்பட பலர் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us