/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் நிலைய பிட்டரிடம் மொபைல், பணம் பறிப்பு
/
மின் நிலைய பிட்டரிடம் மொபைல், பணம் பறிப்பு
ADDED : டிச 12, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: க.பரமத்தியில், துணை மின் நிலைய பிட்டரிடம், மொபைல் போன், பணம் பறித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்-றனர்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் ஜியா வுல்ஹக், 30; கரூர் அருகே, க.பரமத்தியில் உள்ள, துணை மின் நிலையத்தில் பிட்ட-ராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 10 இரவு க.பரமத்-தியில், கோவை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்-போது, டூவீலரில் சென்ற இரண்டு பேர், ஜியா வுல் ஹக் வைத்தி-ருந்த, இரண்டு மொபைல் போன், 5,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து, ஜியா வுல் ஹக் கொடுத்த
புகா-ரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.