/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபைல் போன் திருட்டு 3 பெண்களுக்கு 'காப்பு'
/
மொபைல் போன் திருட்டு 3 பெண்களுக்கு 'காப்பு'
ADDED : மார் 17, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பிரபு, 32; இவர், நேற்று முன்தினம் மதியம், கரூர் பஸ் ஸ்டாண்டில், தள்ளுவண்டியில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டிருந்தார்.
அப்போது, கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஷெரீப் நகரை சேர்ந்த நுாரி, 35, லட்சுமி, 45, லீலா, 60, ஆகிய, மூன்று பேரும் சேர்ந்து, பிரபு வைத்திருந்த மொபைல் போனை திருடினர்.அதை கவனித்த பிரபு மற்றும் பஸ் ஸ்டாண்டில் இருந்த பொது-மக்கள், மூன்று பெண்களையும் பிடித்து, போலீசில் ஒப்ப-டைத்தனர். இதையடுத்து, மூன்று பெண்களையும், கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.