தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கால்நடை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி

கால்நடை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி

கால்நடை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி


ADDED : மார் 08, 2026 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 09:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை:தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கால்நடை விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

குளித்தலை கால்நடைத்துறை உதவி இயக்குனர் லில்லி அருள்-குமாரி தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் ரமேஷ், புஷ்பலதா, குபேரன், செங்குட்டு வன், அபிநய செல்வி, சபரிநாதன் ஆகியோர், கால்நடை வளர்ப்பில் சமீபத்திய முன்-னேற்றங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோ-சனை வழங்கினர்.

இதில் கரவை மாடு பண்ணையம், வெள்ளாடு வளர்ப்பு, செம்-மறி ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, கால்நடை மற்றும் கோழி இனங்களின் முக்கியமான நோய்கள், கால்நடை மற்றும் கோழி பண்ணை தொழில் தற்போதைய முன்னேற்றங்கள், லாப-கரமான கால்நடை பண்ணைகளுக்கான திறன் வாய்ந்த பண்ணை மேலாண்மை, கறவை மாடுகளின் மலட்டுத்தன்மை மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதே போல் பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு உதவும், நவீன இனப்பெருக்க முறைகள், ஐவிஎப் கால்நடைகளில் கோடைகால பராமரிப்பு, கால்நடை விவசாயிகளின் வருமான பாதுகாப்பு, பால் மட்டும் இறைச்சி மதிப்பூட்டல் தீவன உற்-பத்தி, தமிழ்நாட்டில் உள்ள நாட்டு மாட்டின் இனங்கள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனைகளை வழங்கி பயிற்சி வழங்கப்பட்-டது.

கால்நடை உதவி பராமரிப்பாளர்கள் மாணிக்கம், பழனி-யாண்டி, சத்தியமூர்த்தி உள்பட 120 கால்நடை வளர்ப்பு விவசா-யிகள் பயன்பெற்றனர்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாது உப்பு கலவை, தீவன விதைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த கையேடு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us