/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தில் மோகினியார் அலங்காரம்
/
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தில் மோகினியார் அலங்காரம்
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தில் மோகினியார் அலங்காரம்
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தில் மோகினியார் அலங்காரம்
ADDED : டிச 30, 2025 05:20 AM

கரூர்: இன்று வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதில், 9ம் நாள் உற்சவத்தில், சுவாமிக்கு பால், தயிர் திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. நேற்று, மோகினியார் அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
இதில், மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வெண் பட்டாடை ஒய்யார சாய்வு சவுரிக்கொண்டை, மார்பிலே திருமாங்கல்யம் முத்து பவள மணிமாலைகள் அணிந்து பெண் வேடமிட்டு, 'நாச்சியார் திருக்கோலம்' எனப்படும் மோகினி அலங்காரத்தில் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். திவ்ய பிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களை கேட்டவாறு பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இன்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, வைகுண்ட நாராயணன் அவதார அலங்காரம் நடக்கிறது. ஜன., 1ல், வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரம், 2ல் ராமாவதாரம், 3ல் வேணுகோபால கிருஷ்ணன் அலங்காரம், 4ல் வாமண அவதார அலங்காரம், 5ல், ராஜதர்பார் அலங்காரம் நடக்கிறது. 6ல் குதிரை வாகனம், 7ல் ஆண்டாள் திருக்கோலம் அலங்காரம், 8ல் ராப்பத்து, 9ல் ஊஞ்சல் உற்சவம், 10ம் நாளில் ஆழ்வார் மோட்சம் அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

