/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
/
மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 08, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழையால் மாணாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம், டிச. 8-
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சரவணபுரம், வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, கோடங்கிப்பட்டி, அய்யர்மலை, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய இடங்களில், நேற்று மாலை மழை பெய்தது. இந்த மழையால், மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம், துவரை, கடலை பயிர்களுக்கு போதுமான நீர் கிடைத்துள்ளது. மேலும், இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கிணற்றுநீர் பாசன விவசாயிகள், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.