ADDED : அக் 19, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட் திருட்டு; வாலிபர் புகார்
கரூர், அக். 19-
கரூர் அருகே, மொபட் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை சேர்ந்தவர் தீபன்ராஜ், 24; இவர் கடந்த ஜூலை, 4 ல் திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில், ஜூபிடர் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, மொபட்டை காணவில்லை. மொபட்டை மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து, தீபன்ராஜ் போலீசில் புகார் கொடுத்தார். கரூர் டவுன் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

