/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குற்றங்களை தடுக்க அதிகளவில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும்: எஸ்.பி.,
/
கரூரில் குற்றங்களை தடுக்க அதிகளவில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும்: எஸ்.பி.,
கரூரில் குற்றங்களை தடுக்க அதிகளவில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும்: எஸ்.பி.,
கரூரில் குற்றங்களை தடுக்க அதிகளவில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும்: எஸ்.பி.,
ADDED : ஜூலை 22, 2025 01:15 AM
கரூர், கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக ஜோஸ் தங்கையா நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
கரூர் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த பெரோஸ்கான் அப்துல்லா கடந்த, 14ல் சென்னை ஆவடி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக பணியாற்றிய ஜோஸ் தங்கையா, கரூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், 34வது எஸ்.பி., யாக ஜோஸ் தங்கையா பொறுப்பேற்று கொண்டார். கரூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள், புதிய எஸ்.பி., தங்கையாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து எஸ்.பி., தங்கையா, கலெக்டர் தங்கவேலுவை, மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இதையடுத்து, எஸ்.பி., தங்கையா வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக, அதிகளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றங்களை தடுக்க அதிகளவில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இணையவழி குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் திருட்டு தொடர்பான புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சம் இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.