/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பகுதியில் காற்றுடன் மழை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
/
குளித்தலை பகுதியில் காற்றுடன் மழை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
குளித்தலை பகுதியில் காற்றுடன் மழை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
குளித்தலை பகுதியில் காற்றுடன் மழை 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ADDED : மே 15, 2025 01:52 AM
குளித்தலை :குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் முகாமில், 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், நேற்று மாலை பெய்த மழையுடன் காற்று வீசியதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதமடைந்தன. மேற்கூரை பெயர்ந்ததால், மக்கள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டின் மீது விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
இதேபோல், அய்யர்மலை, குப்பாச்சிபட்டி, தேசியமங்கலம் பகுதிகளில் வீசிய காற்றால் சாலையோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளித்தலை நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறியாளர் செந்தில்குமரன் உத்தரவின்படி, நெடுஞ்சாலை துறை ஆர்.ஐ.,சேகர் மற்றும் சாலை பணியாளர்கள் பொக்லைன் மூலம் மரத்தை அகற்றி போக்குவரத்து சரி செய்தனர்.
கரூர் சுற்று பகுதியில் மழை
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில், கோடை காலத்தை யொட்டி, கடந்த சில நாட்களாக, 100 முதல், 104 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேரத்தில் ஏற்படும் புழுக்கம் காரணமாக, பொதுமக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நேற்று கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி பகுதியில், 104.9 டிகிரி வெயில் பதிவானது.
இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணி முதல், 6:00 மணி வரை கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது. அதைதொடர்ந்து, கரூர் டவுன், மாயனுார், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றி மலை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன், சிறிது நேரம் விட்டு விட்டு இடி, மின்னலுடன் மழை பெய்தது. கரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், பெய்த மழையால், கோடை வெப்பத்தால் அவதிப்பட்ட மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.