/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட அளவிலான தடகள போட்டி 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
/
மாவட்ட அளவிலான தடகள போட்டி 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான தடகள போட்டி 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான தடகள போட்டி 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
ADDED : செப் 07, 2025 01:19 AM
கரூர், :மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், 750க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 28வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான தடகள போட்டிகள் நேற்று நடந்தன. தடகள சங்க மாநில தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார். மாவட்டத்தை சேர்ந்த, 750க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 10, 12, 14, 16, 18, 20 வயது பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
மேலும் 100 மீட்டர், 200, 400, 800, 1,500, 5,000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெறும், 14, 16, 18, 20 வயதுக்குட்-பட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியர், தகுதி அடிப்ப-டையில் தேர்வு செய்யப்பட்டு, செங்கல்பட்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட தடகள சங்க செயலாளர் பெருமாள், பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.