ADDED : ஜூன் 15, 2026 03:49 AM

அ நிறம் | அளவு
கரூர்:தென்னிலை அருகே, முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி விவசாயி களுக்கு அளிக்கப்பட்டது.
க.பரமத்தி அருகே, தென்னிலை பி.நல்லிபாளையத்தில் வட்டார வேளாண் அலுவலகம் சார்பில் உழவர் விழா நடந்தது. இதில், வேளாண் துறை உதவி இயக்குனர் ஸ்ரீப்ரியா தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கோவிந்தசாமி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், விவசாய அடையாள எண்ணின் முக்கியத்துவம், மண் வள பாதுகாப்பு, முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சியளித்தார்.கரூர் வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கிருத்திகா ஆகியோர் பயிர்களில் விவசாயிகளுக்கு தேவையான புது ரகங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.
