/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
/
கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
கரூரில் கொசுக்கள் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி
ADDED : மே 29, 2025 01:28 AM
கரூர், தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, இரவு நேரத்தில் துாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியை சுற்றி, அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்கால் உள்ளது. மேலும், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களும் உள்ளன. வாய்க்கால்களில் தற்போது, சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் பெரிய அளவிலான கொசுக்கள் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பழைய சணப்பிரட்டி, இரட்டை வாய்க்கால் செல்லும் பகுதி, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், வசிப்போர் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். கடந்தாண்டு, பகல் நேரத்தில் கடிக்கும் ஏ.டி.எஸ்., என்ற கொசுக்களால், மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிலருக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை, வாய்க்கால் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த பகுதியிலும், குப்பையை தேங்க விடாமல் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மாநகராட்சி நிர்வாகம் தரமான கொசு ஒழிப்பு மருந்துகளை கொள்முதல் செய்து, முறையாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.