/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாப்பகாப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
/
பாப்பகாப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
ADDED : செப் 26, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பகாப்பட்டியில்கொசு ஒழிப்பு பணி
கிருஷ்ணராயபுரம், செப். 26-கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டியில் சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. கொசுக்கள் அதிகம் பரவாமல் தடுக்கும் வகையில், பழைய கழிவு பொருட்களை அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்கள் சேகரித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது. சாலையோர இடங்களில் தேங்கிய கழிவு நீர் அகற்றப்பட்டு, பிளிச்சீங் பவுடர் தெளிப்பு பணிகள் செய்யப்பட்டது.